மெய்ப்பொருள் காண்பது அறிவு

நேற்றைய தினத்தில் மாத்திரம் 10 ஆயிரத்து 356 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

- Advertisement -

நாட்டில் கொரோனாத் தொற்றைக் கண்டறிவதற்காக நேற்றைய தினம் 10 356 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனாத் தொற்றைத்  தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினம் 439 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டனர்.

இதன்படி, அவர்களில் 437 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய இரண்டு பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று அடையாளங் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் பெரும்பாலானோர், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றைய தினம், கொழும்பு மாவட்டத்தில் 305 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 58 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,   நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18 838 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, அவர்களில் , 15 324 பேர்  மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்பில் மூவாயிரத்து 59 பேரும், பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்பில் 12 ஆயிரத்து 265 பேரும் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களில், ஒன்பதாயிரத்து 478 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இதுவரையான காலப்பகுதியில், நாட்டில் மொத்தமாக 12 ஆயிரத்து தொள்ளாயிரத்து 2 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, ஐயாயிரத்து 867 பேர், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக, கொரோனாத் தொற்றைத்  தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த சுமார் 30 ஆயிரம் பேர்,  தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் 36 தனிமைப்படுத்தல் நிலையங்களில், மூவாயிரத்து 812 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனாத் தொற்றைத்  தடுப்பதற்கான தேசிய செயலணி மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz