மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு – கண்டி நெடுஞ்சாலையில் அமைக்கப்படவுள்ள புதிய மாற்றுவழிப் பாதை!

- Advertisement -

கொழும்பு – கண்டி நெடுஞ்சாலையில், வரக்காப்பொல – அம்பேபுஸ்ஸ நகரங்களுக்கு இடையிலான வாகன நெரிசலைக் குறைப்பதற்கு புதிய மாற்றுவழிப் பாதையொன்று அமைக்கப்படவுள்ளது.

இதன்படி, புதிய மாற்றுப் பாதையை அமைப்பதற்கு 410 கோடி ரூபா வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, கொழும்பு – கண்டி நெடுஞ்சாலைக்கு சமாந்தரமாக, அதன் வலப்புறத்தில் வரக்காபொல – அம்பேபுஸ்ஸ நகரங்களை இணைக்கும் வகையில் இந்தப் பாதை அமைக்கப்படவுள்ளது.

இதன்படி, இதற்கான நடவடிக்கைகள் நேற்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த வீதி அமைக்கப்பட்டதன் பின்னர், வரக்காப்பொல  முதல் அம்பேபுஸ்ஸ வரை, இலகுவாக பயணிக்க முடியும் என நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.

Decathlon கொழும்பின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட்கள் காட்சியறையை தற்போது யூனியன் பிளேஸில் திறந்து வைத்துள்ளது

விளையாட்டு பொருட்களின் சில்லறை விற்பனையாளராக வாடிக்கையாளர் மத்தியில் நட்பெயர் பெற்ற DECATHLON நிறுவனமானது தமது மற்றுமொரு புதிய கிளையை கொழும்பில் ஸ்தாபித்துள்ளது. யுனியன் பிஸஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள DECATHLON நிறுவனத்தின் இரண்டாவது கிளையானது உடற்பயிற்ச்சி...

ரிஸாட் பதியுதீன் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டித்த S.M.M. முஷர்ரப்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் தொடர்பில் எந்த குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M.M. முஷர்ரப் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் – சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். தற்போதையநிலையில் பயங்கரவதா தடுப்பு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவின் விசேட கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காண்பதோடு, உரிய தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்தவித பாரபட்சமும் இன்றி...

Developed by: SEOGlitz