மெய்ப்பொருள் காண்பது அறிவு

இன்றும் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் இலவச கிளினிக் சேவைகள்!

- Advertisement -

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தொடர் மாடிக் குடியிருப்புத் தொகுதிகளை அண்மித்த பகுதிகளில், இன்றும் நடமாடும் இலவச கிளினிக் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

முதலாவது நடமாடும் சேவை, முகத்துவாரம் மெத்சத உயன தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியை அண்மித்து கடந்த 16ஆம் திகதி காலை 9 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மாளிகாவத்தை NHS குடியிருப்புத் தொகுதியை அண்மித்து இன்றைய தினம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், முகத்துவாரம்  ரந்திய உயன (රන්දිය උයන) குடியிருப்புத் தொகுதியை அண்மித்து நாளைய தினமும்,

புளூமெண்டல் சிறிமுத்து உயன (සිරිමුතු උයන) குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 23 ஆம் திகதியும்,

தொட்டலங்க முவதொர உயன (මුවදොර උයන) குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 24 ஆம் திகதியும்,

முகத்துவாரம் சிறிசந்த செவன (සිරිසද සෙවණ) குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 25 ஆம் திகதியும்,

முகத்துவாரம் ரன்முத்து செவன ( රන්මුතු සෙවන) குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 26 ஆம் திகதியும்,

முகத்துவாரம் சக்ஹிரு செவன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 27 ஆம் திகதியும்,

முகத்துவாரம் லக்ஹிரு செவன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 28 ஆம் திகதியும், இந்த சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த இலவச சேவைகள், மேற்கூறப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும், காலை 9.00 மணிக்கு இடம்பெறும் என கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

மஹர சிறைச்சாலை விவகாரம் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz