மெய்ப்பொருள் காண்பது அறிவு

மினுவாங்கொடையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

- Advertisement -

மினுவாங்கொடை திவுலுப்பிட்டிய கொத்தணியில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 899 ஆக அதிகரித்துள்ளது.

இதில், நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 110 பேருடன், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளது.

- Advertisement -

அவர்களில் மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்கள்  38 பேருக்கும் மற்றும் ஆடைத் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுடன் தொடர்புகளை வைவத்திருந்த 72 பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஆயிரத்து 956 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய வைத்தியசாலையில் 171 பேரும், கம்புறுகமுவ வைத்தியசாலையில் 228 பேரும், நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் 324 பேரும், காத்தான்குடி வைத்தியசாலையில் 139 பேரும், தெல்தெனிய வைத்தியசாலையில் 120 பேரும், ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் 160 பேரும், வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் 121 பேரும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 14 வெளிநாட்டவர்கள் வைத்தியசாலைகளில் தங்கவைக்கபட்டு சிகிச்சையளிக்கபட்டு வருகின்றது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்றுவந்த 3 ஆயிரத்து 385 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 316 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கபட்டு வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்றைய தினத்தில் மாத்திரம் 8 ஆயிரத்து 589 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 74 ஆயிரத்து 448 PCR பரிசோதனைகள் முன்னெடுக்க்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 314 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் – சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!

பாகிஸ்தான் மற்றும் சிம்பாவே ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்படி, இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை...

துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்!

கிரேக்க தீவான சமோஸின் வடக்கேயும், துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் 7.0...

தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகும்: த.தே.க கருத்து!

எதிர்வரும் மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்று எட்டப்படாவிட்டால் தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகுமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு விசேட சலுகை!

கம்பஹா மாவட்டத்தில், வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, இந்த நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்...

Developed by: SEOGlitz