மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 36 பேர் கைது!

- Advertisement -

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள 19 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும். மேலும், நேற்றையதினம் கொள்வனவு நடவடிக்கைகளுக்காக வர்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன திறக்கப்பட்டன. எனினும் இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்ற காரணத்தினால் அவைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. அனைவரையும் அவர்களது வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பகுதிகள் ஊடாக தூரபிரயாணம் மேற்கொள்ளும் வாகனங்கள் பயணிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கோ அல்லது நபர்களை இறக்குவதற்கோ ஏற்றுவதற்கோ அனுமதி அளிக்கப்டவில்லை. மேலும் கடந்த 4 ஆம் திகதி முதல் இதுவரை ஊரடங்கு விதிகளை மீறிய 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன். 40 வாகனங்களும் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாளங்களில் 36 பேர் கைது செயயப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறியவர்கள் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த...

அவுஸ்திரேலியாவில் முடக்கச் செயற்பாடுகளில் தளர்வு!

அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இலகுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மெல்பர்ன் மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தளவு...

உற்பத்திப் பொருட்களை புறக்கணிப்பதை நிறுத்துமாறு பிரான்ஸ் கோரிக்கை!

பிரான்ஸ், தனது நாட்டின் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் கோரிக்கையை நிறுத்துமாறு மத்திய கிழக்கு நாடுகளை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், குவைத், ஜோர்தான், சிரியா மற்றும் காசா ஆகிய நாடுகளில் உள்ள சில கடைகளில் பிரான்ஸ்...

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மேலும் பலர் வெளியேற்றம்!

முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 316 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட குறித்த அனைவரிடமுட் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரசோதனைகளில் தொற்று ஏற்படவில்லை என உறுதி...

கண்டியில் சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி!

கண்டி கலஹா பகுதியில்  15 வயதுடைய  சிறுவன்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் தனது தந்தையுடன் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றுவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளமை...

Developed by: SEOGlitz