மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் PCR பரிசோதனைகள் மேலும் அதிகரிப்பு- ஜயருவன் பண்டார கருத்து!

- Advertisement -

நாட்டில் PCR பரிசோதனைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், விசேட வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவிக்கின்றார்.

கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுப் பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

மேலும், இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறிய விடயங்களாவது: pcr பரிசோதனைகளை அதிகரிக்க தேவையான உபகரணங்கள் கிடைக்கபெற்றுள்ளன. இதற்கமைய பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக புதிதாக ஐந்து இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும், ஏனைய மூன்றும் அத்தியவசியமான இடங்களுக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்படும்.சுகாதார சேவையாளர்களின் பாதுகாப்புக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தற்போது இலங்கையில் காணப்படுகின்றன. PCR பரிசோதனைகளுக்காக பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.எனினும் பரிசோதனை நடவடிக்கைகள் உரிய பராமரிப்பின் கீழ் செயற்படுத்தப்படுகின்றன.pCR பரிசோதனையின் பெறுபேறுகளை 24 மணி நேரத்திற்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தம்பலகாமம் – இக்பால் நகர் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா?

தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தையை கடந்த காலங்களில் வரட்சியான காலநிலையின் போது மாத்திரமே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், தற்போது மழைக்காலத்திலும் குடிநீர் இன்றி சிரமங்களை எதிர்கொள்பவர்கள் நாட்டில் அதிகளவாக இருக்கின்றனர். இவ்வாறுதான் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம்...

மூடப்பட்டிருந்த கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறப்பு!

மூடப்பட்டிருந்த கொழும்பு -  கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த பொலிஸ் நிலையம்...

களுபோவில வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவருடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூகொடை பொலிஸ் OIC இற்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள பூகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொல்கஸ்லந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், போதைப் குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம்...

ஊரடங்கை மீறிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் 24 பொலிஸ் பிரிவுகளில் இதுவரை ஊரடங்கு...

Developed by: SEOGlitz