மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் PCR பரிசோதனைகளை முன்னெடுக்க உதவுமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை!

- Advertisement -

நாட்டில் PCR பரிசோதனைகளை முன்னெடுக்க உதவுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளளரினால் இதற்கான கோரிக்கை கடிதமொன்று நேற்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் நாட்டின் அனைத்து பல்கலைக்கழக மருத்துவ பீடங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களும் இந்த கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஶ்ரீ ஜயவர்த்தனபுர, காலி, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் PCR பரிசோதனைகளை உடனடியாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் வைத்திய பீடத்தில் இன்றைய தினத்தில் PCR பரிசோதனைகளை முன்னெடுக்க  எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடல்!

மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் சீ.கே. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 85 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன்சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடைய 85 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான...

நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் விசேட இரயில் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான மார்க்கம், புத்தளம் மற்றும் களணிவெலி ஆகிய மார்க்கங்களிலான அனைத்து அலுவலக மற்றும் பயணிகள் ரயில்...

இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பொதுமக்களின் பாதுகாப்பினை  கருத்திற்கொண்டே  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும்  எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளர். இவ்விடயம் தொடர்பாக...

அலரி மாளிகையில் கொரோனா தொற்று? – பிரதமர் அலுவலகம் மறுப்பு!

பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றில் பணிபுரியும் எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த...

Developed by: SEOGlitz