மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர் தாக்கம் தொடர்பில் அங்கஜன் இராமநாதன் கண்டனம்!

- Advertisement -

முல்லைத்தீவு பிரதேசத்தில் எமது பிராந்திய செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்கு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

- Advertisement -

இதேவேளை, முல்லைத்தீவு பிரதேசத்தில் எமது பிராந்திய செய்தியாளர் ஒருவர் நேற்றைய தினம் தாக்கப்பட்டிருந்தார்.

முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோதமான மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் எமது கெப்பிட்டல் செய்தியின் பிராந்திய செய்தியாளரான சண்முகம் தவசீலனுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், சண்முகம் தவசீலனுடன் செய்தி சேகரிக்கச் சென்ற மற்றுமொரு ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய,  முல்லைதீவு பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், காயமடைந்த எமது செய்தியாளர் சண்முகம் தவசீலன் முல்லைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக, சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடக இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் இடம்பெறும் சட்ட விரோத சம்பவங்கள் தடுக்கப்படுவதற்கு பதிலாக, அவற்றை அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் கவலையளிப்பதாக, சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு, இவ்வாறான நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையின் ஊடாக கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் நீதி கிடைக்காத சமூகமாக ஊடகவியலாளர்கள் காணப்படுவதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையம் ஆகியன சுட்டிக்காட்டியுள்ளன.

ஆகவே, ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிலோன் மீடியா போரம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz