மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் கைது விவகாரம்: குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை!

- Advertisement -

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வது தொடர்பான கோரிக்கையினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

- Advertisement -

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட இருவரைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும், ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவைப் பிறப்பிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு, நீதிமன்றத்தில் பிடியாணை பெற வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நீதிமன்றப் பிடியாணையொன்றைப் பெற்று அவரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட இருவரைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், ரிஷாட் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், பிடியாணை அவசியமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களத்தின் தகவல் தொடர்பாடல் அதிகாரி நிஷாரா ஜயரத்ன எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், தேர்தல் சட்டங்களை மீறி, வாக்காளர்களுக்கு போக்குவரத்து சேவைகளைப் பெற்றுக் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தி, வாக்காளர்களுக்கு போக்குவரத்து சேவைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

மஹர சிறைச்சாலை விவகாரம் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz