மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா அச்சம் குறித்து இராணுவத் தளபதி விசேட அறிவித்தல்!

- Advertisement -

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள், வைத்தியர்களை நாடி PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

எவரேனும் ஒரு நபர், கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரிடம் தொடர்பினை வைத்திருந்தால், வைத்தியர்கள் கூறுவதைப் போன்று, சுமார் ஆறு நாட்களின் பின்னர், தமது PCR பரிசோதனைகளை மேற்கொண்டால் தான் வெற்றிகரமான பெறுபேறொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும். கொரோனா தொற்றளர்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அது உங்களுக்குத் தெரியும். இதனால் வைத்தியர்களுக்கு அறிவித்து PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.அத்துடன் இன்னும் சிலர் PCR பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னர் பல இடங்களுக்கு நடமாடுகின்றார்கள்.இந்த நிலையில் உங்களுடைடைய PCR பெறுபேறு வரும் வரை வேறு இடங்களுக்கு நகராது சுய தனிமையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக உயர்வடைந்துள்ளது.

Jaffna Stallions அணியில் விளையாடுவோர்கள் குறித்து முழு விபரம் உள்ளே!

LPL தொடரில் பங்குபற்றவுள்ள Jaffna Stallions இறுதி அணி. 1. Thisara Perera ( தலைவன் ) 2. Suranga Lakmal 3. Dhananjaya De Silva 4. Avishka Fernando 5. Wanindu Hsaranga 6. Shoaib Malik (...

கற்றல் செயற்பாடுகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை பயன்படுத்துவது தொடர்பில் கயந்த கருணாதிலக்க தெரிவிப்பு!

தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது இணையவழி கல்வி முறைமையே இடம்பெற்று வருகின்றது. இது...

பிராந்திய செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரிக்கை!

பிராந்திய செய்தியாளர்களுக்கான ஓய்வூதிய வசதிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பசறை – நமுனுகல பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா!

பசறை - நமுனுகல - கனவரெல்ல 13 ஆம் மைல்கல் பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேல்மாகாணத்திலிருந்து அண்மையில் குறித்த பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கு கடந்த 19 ஆம் திகதி கொரோனா...

Developed by: SEOGlitz