மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவைப் பிரிவு தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது

- Advertisement -

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவைப் பிரிவு தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு, வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு, கடந்த 8 மற்றும் 09 ஆம் திகதிகளில் மாத்திரம் மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, இன்று முதல் மீண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏற்றுமதி ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான சேவைகளை, தொலைபேசியூடாக பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொலைபேசியூடான சேவைகளைப் பெற்றுக் கொள்ள, 0112 33 88 12 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் மரணங்கள் மற்றும் மரண ஆவணங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள, 0112 32 30 15 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz