மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

- Advertisement -

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள்  இன்றும் திறக்கப்பட்டிருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இதற்கமைய, தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் மூன்றாவது நாளாகவும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று மருந்தகங்கள், சதொச நிறுவனம், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள்  தமது குடியிருப்புகளுக்கு அண்மையில் உள்ள கடைத்தொகுதிகளுக்கு மாத்திரமே சென்றுவருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், ஒருவர் மாத்திரமே  வெளியில் சென்றுவருவதற்கு  அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் ஒருவாரமாக  தனிமைப்படுத்தல்  ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதனடிப்படையில் கம்பஹா, கணேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிப்பிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வேயாங்கொட, மினுவாங்கொட, வீரங்குல, வெலிவேறிய, பல்லேவேல மற்றும் யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

மேலும். களனி வலயத்திற்குட்பட்ட ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் பிரிவுகளுக்கும் நீர் கொழும்பு வலயத்திற்குட்பட்ட திவுலப்பிட்டிய மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளிலே  இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, ஊரடங்கு சட்டம் அழுல்ப்பட்டுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 101  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 28 வாகனங்களும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் :

கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். வரவுசெலவு திட்டம் மீதான இன்றை குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே...

களுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெஹிவளை , களுபோவில பிரதேசத்தின் கெவும்வத்தை பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொகுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் 30...

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மகிந்தவுடன் விசேட சந்திப்பு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பிரதமரின் விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதியில் தங்கவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதி ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வீடு செல்வதற்கு முன்னர் தனிமைப்படுத்தல்...

Developed by: SEOGlitz