மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.தே.கட்சிக்கு திஸ்ஸ அத்தனாயக்க விடுத்துள்ள வலியுறுத்தல்!

- Advertisement -

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணித்தால் மாத்திரமே, ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்காலம் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவிக்கின்றார்.

பொரள்ளையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

நாடாளுமன்றத்திற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றுள்ளது.ஆனால் தற்போது இரண்டு மாதங்களாக அந்தப் பதவிக்கு ஒருவரை நியமித்துக் கொள்ள முடியாத வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.அது எமக்கு பிரச்சினை இல்லாவிட்டாலும் ஐக்கிய தேசிய கட்சி இதுவரை மக்கள் வழங்கிய தகவலை இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை.கடந்த தேர்தலின் போது, ஐக்கிய தேசிய கட்சி விழும் இடம் குறித்து நாம் கூறினோம்.தாம் கூறுவதையே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற உயர் கர்வத்தில் இருந்தார்கள்.ஆனால் 70 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சிக்கு விழுந்துள்ள இடம் மிகவும் மோசமானதாகும்.மக்கள் வழங்கிய செய்தியை புரிந்து கொள்ளவில்லை.ஆனால் அவர்கள் மாற வேண்டும் எனில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னோக்கிப் பயணித்தால் மாத்திரமே இந்த நிலைமையை தடுத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

Developed by: SEOGlitz