மெய்ப்பொருள் காண்பது அறிவு

பரீட்சை நிலையங்கள் குறித்து கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

- Advertisement -

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பரிந்துரைகளுக்கமைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி நாளை இடம்பெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 936 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு இம்முறை 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 85 ஆயிரத்து 244 தனியார் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

குறித்த பரீட்சைகள் 2 ஆயிரத்து 648 நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

Developed by: SEOGlitz