மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆவது திருத்தம் தொடர்பில் அமரபுர பௌத்த சங்கபீடம் வலியுறுத்தல்!

- Advertisement -

20 ஆவது திருத்தம் தொடர்பில் தமது கருத்துகளை தற்போதைய சூழ்நிலையில் தெரிவிக்க முடியாது என அமரபுர பௌத்த சங்கபீடம் குறிப்பிட்டுள்ளது.

தமது சங்கபீடத்தின் நிர்வாகசபை கூடியதன் பின்னர் கலந்துரையாடியே இது தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியுமெனவும் அமரபுர பௌத்த சங்கபீடம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

தற்போதைய சூழ்நிலையில், 20 ஆம் திருத்தம் குறித்து கருத்து தெரிவிக்க, அதில் உள்ள பிரிவுகள் தொடர்பில் ஆராய வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சில சரத்துக்ளை அரசாங்கம் மாற்றியமைப்பதாக தெரிவித்துள்ள நிலையிலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையிலும், கருத்துகளை முன்வைப்பதில் அதிக கவனமாக இருக்க வேண்டுமென தாம் எண்ணுவதாகவும் அமரபுர பௌத்த சங்கபீடம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் நிறைவேற்று அதிகாரம் மேலும் வலுப்படுத்தப்படவேண்டும் என்பதே, தமது விருப்பம் எனவும் அமரபுர பௌத்த சங்கபீடம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நிவார் சூறாவளி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள நிவார் சூறாவளி, காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கு திசையில் 213 கிலோமீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை அறிக்கையில் இந்த விடயம்...

மேலும் சில இடங்களில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை!

முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டமா திணைக்களத்தின் சமர்ப்பனத்திற்கமைய  இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில்...

நுரைச்சோலை – லக்விஜய மின்நிலையம் தொடர்பான விசேட தீர்மானம்!

நுரைச்சோலை - லக்விஜய மின்நிலையம் தொடர்பான சுற்றுச்சூழல் மதிப்பாய்வில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையையும் இணைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லக்விஜய மின்நிலையம் மற்றும் அது தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கோப் குழு நேற்று...

மைத்ரிபால விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்றையதினம் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, ஆணைக்குழுவில்...

கண்டி நகர் பாடசாலைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

கண்டி நகரில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகள் முடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் கொரோனா வைரஸ்...

Developed by: SEOGlitz