மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரியாஜ் பதியுதீன் தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட செய்தி – தனக்கு நியாயம் வேண்டும் என ரியாஜ் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

- Advertisement -

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் பொலிஸாருக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், குறித்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யுமாறும் சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும்,  ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம்  நிறுத்தியமை நியாயமற்றது எனவும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தை, பலர் அரசியல் நலனுக்காக பயன்படுத்துவதாக ரியாஜ் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நேற்று அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இந்த விடயத்தில் தலையிட்டு, தனக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு  ரியாஜ் பதியுதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் மற்றும் சமூகவாத காரணங்களை அடிப்படையாக கொண்டே, தன்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரியாஜ் பதியுதீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலைக் கைதிகள் 12 பேருக்கு கொரோனா தொற்று!

மஹர சிறைச்சாலைக் கைதிகள் 12 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளுள் இதுவரை 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை...

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்றைய நாளில் பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு  தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி தொற்றுக்குள்ளான 147 பேர் நேற்றைய நாளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்...

வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  பிரதிப்பொலிஸ்  மா அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 வாகன...

மஹர சிறைச்சாலை தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட  மோதலில் சேதமடைந்துள்ள  பொருட் சேதங்கள் குறித்து இன்று மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பாரிய பொருட் சேதம்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறைச்சாலையில்...

Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி…!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 6 ஆவது போட்டியில் Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில்,  Kandy Tuskers மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் பலப்பரீட்சை...

Developed by: SEOGlitz