மெய்ப்பொருள் காண்பது அறிவு

டின் மீன், வெங்காயம் மற்றும் சீனி – விலை குறைப்பு!

- Advertisement -

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கான இறக்குமதி வரியை நீக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

தற்போது காணப்படும் வாழ்க்கைச் செலவு மற்றும் கொரோனா தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், பெரிய டின் மீன் ஒன்றின் விலை 200 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 100 மற்றும் சீனி கிலோ ஒன்றின் விலை 85 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 500 ரூபாவுக்கு அதிகமாக சதோசவில் கொள்வனவு செய்யும் போது, பருப்பு கிலோ ஒன்றினை 150 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, குருணாகலை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன கொழும்பு நகருக்கான தேங்காய் விநியோகத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு சதோச விற்பனை நிறுவனத்தின் மூலம், தேங்காயை நியாயமான விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

LPL கிரிக்கெட் திருவிழா – Jaffna Stallions அணி அபார வெற்றி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டியில் Jaffna Stallions அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

கொரோனா உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதை மை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மேலும் 221 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனாவுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்...

நோர்வூட் பிரதேசத்தில் தீப்பரவல் : 12 குடியிருப்புகள் பாதிப்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிவ்வெளி தொழிற்சாலைப் பிரிவில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீப்பரவலினால் 12 குடியிருப்புகள் எரிந்து போயுள்ளன. இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 இற்கு  இடம்பெற்றதாக எமது பிராந்திய...

Developed by: SEOGlitz