மெய்ப்பொருள் காண்பது அறிவு

உடநுவர பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்!

- Advertisement -

உடநுவர பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கெலிஓய பிரதேசத்தை அண்மித்த பகுதியில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டதையடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, பிரதேச சபையினால் வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, உடநுவர பிரதேச சபையின் தலைவர் காமினி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த கொரோனா தொற்றாளர்,  பிரதேச சபைக்கு வருகை தந்ததாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், இதனால் பொது மக்கள் இது குறித்து அச்சமடைய வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த கொரோனா தொற்றாளர், சிலாபம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவருடன் தொடர்புடைய அனைவரும் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக உடநுவர பிரதேச சபைத் தலைவர் காமினி தென்னகோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்த சூடான் அரசியல் கட்சிகள்!

இஸ்ரேலுடன் சுமூகமான உறவைப் பேணும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சூடான் அரசியல் கட்சிகள்  நிராகரித்துள்ளன. இந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியொன்று உறுவாக்கப்படுமென சூடான் அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர். நாடுகளுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர இணங்கியுள்ளதாக இஸ்ரேல்,...

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 240 பேர் குணமடைவு!

முப்படையினால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 240 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz