மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் 19 அச்சம்: பரீட்சை நிலையங்களில் முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்!

- Advertisement -

கொவிட் 19 தொற்று அச்சம் காரணமாக பரீட்சை நிலையங்களில் முன்னேற்பாடு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, பரீட்சை நிலையங்களை அண்மித்த வைத்தியசாலைகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி, சிகிச்சைகளை வழங்குவதற்காக அம்பியூலன் வண்டிகளை தயார்படுத்தல் மற்றும் விடுதி வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்து 648 நிலையங்களில் குறித்த பரீட்சை இடம்பெறவுள்ளது.

அத்துடன், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி,  நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து 36 நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையிலேயே,  முன்னேற்பாடு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், 2020 நிதியாண்டிற்கான இரண்டு...

முற்றாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – டிக்கோயா நகரம் வழமைக்கு திரும்பியது!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ருந்த ஹட்டன் - டிக்கோயா நகரின் ஒருபகுதி மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சில கடைகளை திறப்பதற்கு சுகாதார தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றாளர்...

உள்ளுர் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம்: தயாசிறி ஜயசேகர!

நாட்டின் தேசிய கொடி உள்ளிட்ட உள்ளுர் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உள்ளுர் தயாரிப்புக்களான கைவினைப் பொருட்கள் ஆடை உற்பத்தி துறையினை...

வத்தளையிலுள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா!

வத்தளை பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் சுமார் ஆயிரம் பேர் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர்களுள் 122 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை...

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இதுவரையான காலப்பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் வத்தளை...

Developed by: SEOGlitz