மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 656 பேர் நாட்டுக்கு வருகை!

- Advertisement -

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 656 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 2 விசேட விமானங்களின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்படி, ஜோர்தானின் அம்மான் விமான நிலையத்தில் இருந்து ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான UL 1506 எனும் இலக்க விசேட விமானம் மூலம் 285 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்று இரவு 10.10க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 650 எனும் இலக்க விசேட விமானம் மூலம் 371 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்று மாலை 4.20க்கு மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அனைவரும், ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு தொழில் நிமித்தமாக சென்றிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்தளை மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களுக்கு வருகை தந்த அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இரு நாடுகளுக்கிடையிலான விமான சேவைக்கு தடை! காரணம் என்ன?

இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கிடையிலான விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து டுபாய் சென்ற விமானங்களில் பயணித்த பயணிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, டுபாய் இந்தத் தடை உத்தரவைப்...

நாட்டின் சில மாவட்டங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும்- சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்திலும், வடமேல் மாகாணத்திலும் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்க கூடுமென எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில்...

ரஷ்யாவில் கொரோனா தொற்று குறித்து தற்போதைய நிலவரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 ஆயிரத்து 905 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 91 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்காரில் இருந்து வருகைத்தந்த ஒருவர் மற்றும் ஓமானில் இருந்து வருகை...

இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலனை!

மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலித்துவருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி Mark Meadows  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Wisconsin...

Developed by: SEOGlitz