மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாலக டி சில்வா தாக்கல் செய்த மனு தள்ளுப்படி!

- Advertisement -

TID எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தில் இருந்து மீளப் பெறப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்துவைத்தமை சட்ட விரோதமானது என அறிவிக்குமாறு கோரி குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

- Advertisement -

பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் கொண்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியினால் நீதிமன்றத்தில் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது.

தனது மனுதாரர் மீதான விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வேறு பிரிவுக்கு மாற்றுதல் மற்றும் மனுதாரருக்கு உரித்தான கொடுப்பனவுகளை பிரதிவாதிகள் செலுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், குறித்த கோரிக்கைகளுக்கு, பிரதிவாதிகள் இணங்கினால் அடிப்படை உரிமை மனுவை மீளப் பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும், உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, குறித்த விசாரணை நடவடிக்கையை குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வேறு பிரிவுக்கு மாற்றுவது குறித்து, பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன், மனுதாரரின் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி தீர்வொன்றைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும், உயர்நீதிமன்றத்தில்  பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்தார்.

இதனை அடுத்து, இந்த விடயம் தொடர்பில் இரு தரப்பினராலும் இணக்கம் காணப்பட்டதை அடுத்து, மனுதாரரான முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தில் இருந்து மீளப் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த  அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தில் இருந்து மீளப் பெறப்பட்டதை அடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்வதாக, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும்...

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பப் படிவங்களில் காணப்படும் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த விண்ணப்பங்களை மீள்பரிசீலனை செய்தல் மற்றும் அவற்றில் உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு 05...

20 இற்கு எதிரான மனுக்களின் இரண்டாம் நாள் பரிசீலனை ஆரம்பம்

20 ஆவது திருத்த சட்டமூலத்தை ஆட்சேபித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்,  குறித்த...

கட்டிடங்களை நிர்மாணிக்க புதிய முறைமை

ஆபத்தான கட்டிடங்களை அடையாளங்காண்பதற்கும், புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற கட்டிடங்களுக்கு அனுமதியை வழங்குவதற்கும், புதிய முறைமையொன்றை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கட்டிடங்கள் தொடர்பில் ஆராய்கின்ற உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு, புவிச் சரிதவியல் மற்றும் அளவைப்...

வாகன கொள்வனவாளர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் செய்தி

இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என வாகன ஒழுங்குறுத்துகை, பேருந்து போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார். இலங்கையில் வாகனங்களை...

Developed by: SEOGlitz