மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆவது திருத்தம் தொடர்பில் கல்வியமைச்சர் கருத்து!

- Advertisement -

20 ஆவது திருத்தத்தின் ஊடாக, நாட்டில் காணப்படுகின்ற நிச்சயமற்ற தன்மைகளை நீக்க வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவிக்கின்றார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

20 ஆவது திருத்தம் என்பது அரசியலமைப்பு மாற்றத்தின் ஆரம்பம் மாத்திரம் ஆகும். இன்னும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.மிக விரைவில் தீர்க்கப்பட வேண்டிய சில விடயங்கள் குறித்து நாம் விசேட கவனஞ் செலுத்தியுள்ளோம்.இவற்றை நீண்காலத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது.உதாரணமாக ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சை வகிக்க முடியுமா.இது தொடர்பில் நிச்சயமற்ற தன்மை இருக்கக் கூடாது.அது பாதுகாப்பு விடயம் என்ற காரணத்தினால் அது தொடர்பில் மிகவும் தெளிவான தன்மையொன்று இருக்க வேண்டும்.அதனை நீதிமன்றத்துக்கு ஒப்படைத்து நீண்ட காலத்திற்கு எடுத்துச் சென்று நிச்சயமற்ற தன்மையொன்று இருக்கக் கூடாது.அந்த வரையறுக்கப்பட்ட நோக்கத்தைக் கொண்டே 20 திருத்தம் அமையப் போகின்றது.அது தொடர்பில் நாம் மக்களை முழுமையாக  தெளிவுபடுத்தினோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்

கண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போதே...

அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கோரி தாய்லாந்தில் போராட்டம்

அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் வேண்டுமெனக் கோரி தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு  போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்,...

Developed by: SEOGlitz