மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரம் முதல் மாகாண சபைத் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்!

- Advertisement -

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கை, இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

“மாகாண சபைத் தேர்தலை நடத்தாது தற்போது பல காலம் கடந்துவிட்டது. இதனால் மாகாண சபைகள் செயலிழந்து காணப்படுகின்றன.

அத்துடன் மாகாண சபைகளுக்கு அதிகார பகிர்வை வழங்குதல் போன்ற விடயங்கள் தற்போது சில சட்டதிட்டங்களினால் கைவிடப்பட்டுள்ளது.

இதனால் மாகாண சபைகளின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயார் எனில் நாம் போட்யிடுவதற்கு தயாராகவுள்ளோம்.இதனால் இந்த வாரம் முதல் இதற்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

மாகாண சபைக்கு முன்னிலையாகுவதற்கு விருப்பமான புதிய விண்ணப்பதாரிகள், புதிய இளம் வேட்பாளர்கள், கல்வியிலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கு நாம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம்.

இதற்கமைய விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகளை இந்த வாரம் ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை திட்டம்!

தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையிலான திட்டமொன்று  தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் தேங்காய்களின் விலை உயர்வடைந்துள்ளமை தொடர்பில், தென்னைப் பயிர்ச்செய்கை...

நாட்டில் இயற்கையின் பாதிப்பு காரணமாக பாரிய உயிரிழப்புக்கள் பதிவு!

நாடு முழுவதும் ஏதேனும் ஓர் இடத்தில், இயற்கையின் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக ஆண்டுதோறும்  நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. மேலும், உயிரிழப்பைவிட, பல மடங்கு பொருளாதாரச் சேதமும் ஏற்படுகின்றது. பலர்,  தங்களது வாழ்விடங்களையும்,  ஆண்டுக்கணக்கில்...

கிராமப்புற மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 313 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குவைத்திலிருந்து வருகைதந்த 7...

அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று!

COPA எனப்படும் அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கோப் மற்றும் கோபா என அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான  நாடாளுமன்ற குழு மற்றும் அரச கணக்காய்வு குழுவின் உறுப்பினர்கள் கடந்த...

Developed by: SEOGlitz