மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமழரசுக் கட்சியில் இருந்து சுமந்திரன் நீக்கப்பட வேண்டும் – தவராசா கருத்து!

- Advertisement -

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் நீக்கப்பட வேண்டும் என அந்தக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்திற்கு எழுதியுள்ள கடிதமொன்றிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதற்கமைய, கடந்த பொதுத் தேர்தலில் கட்சியின் பாரிய பின்னடைவுக்கு, சுமந்திரனே பிரதான காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்.ஏ சுமந்திரன், கட்சியின் கட்டுக்கோப்பை மீறி,  தன்னிச்சையாக மேற்கொண்ட தீர்மானங்களினால், கடந்த தேர்தலில் பல வாக்குகளை இழக்க நேரிட்டதாக கே.வி. தவராசா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எம்.ஏ சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்படாத பட்சத்தில்,  ஏழு தசாப்தங்களுக்கு மேலாக  நிலைநிறுத்தப்பட்ட தமிழரின் உரிமைகளுக்கான அர்ப்பணிப்புக்கள் மற்றும் தியாகங்கள் அர்த்தமிழந்து போகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சுமந்திரனை  கட்சியிலிருந்து உடனடியாக நீக்காவிட்டால்,  அது பாரிய வரலாற்றுத் தவறாக அமையும் என தமிழரசுக் கட்சியின்  கொழும்புக் கிளைத் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கோரிக்கை கடிதத்தின் பிரதிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும்  கட்சியின் உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – நீதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடி பணிப்புரை..!

தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு நீதி  அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்..!

நான்கு நாடுகளுக்கான புதிய தூதுவர்கள்  இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கொரியக்...

புதிய வரவுசெலவு திட்டம் – அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது..!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் நவம்பர்...

கல்விசார் சமூகத்திற்கு அங்கஜன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!

நாட்டில் எதிர்காலத்தில் கல்விசார் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று...

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராஜியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில்...

Developed by: SEOGlitz