மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்பிரகாரம் ஹெரோயின் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 174 பேரும் கஞ்சா போதைப்பொருள் மோசடி தொடர்பில் 105 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் வழங்கியுள்ள அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.