மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஞானசார தேரர் – பூஜித உள்ளிட்டோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசேட வாக்குமூலம்!

- Advertisement -

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானியான ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிர மெண்டிஸ், நேற்றைய தினம் முதற்தடவையாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

அத்துடன், கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோரும் நேற்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

- Advertisement -

இதுவேளை, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரும் நேற்றைய ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

ஞான சார தேரர் குறித்த ஆணைக்குழுவில் அண்மையில் வழங்கிய சாட்சியம் ஊடாக, தாம் பாதிக்கப்பட்டதாக கூறி 10 முஸ்லிம் அமைப்புக்களினால் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அது குறித்து ஆராய்வதற்காகவே கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் M L A M ஹிஸ்புல்லா, இரண்டாவது தடவையாக நேற்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோரும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz