வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 296 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றம் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து, அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலிருந்து வருகை தந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமாமொன்றின் ஊடாக, 258 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் இன்று அதிகாலை 2.11 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 10 இலங்கையர்கள், இன்று அதிகாலை 1.23 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மேலும், கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR – 668 எனும் விமானம் ஊடாக, 28 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.33 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்
இதன்படி, அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலேயே PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.