மெய்ப்பொருள் காண்பது அறிவு

சந்தையில் மரக்கறிகளின் பொதியொன்றை 350 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானம்!

- Advertisement -

சந்தையில் 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படக்கூடிய மரக்கறிகளின் பொதியொன்றை 350 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

ஜனாதிபதியின் சுபீட்சமான நோக்கு திட்டத்தை சாத்தியமாக்கும் வகையில் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணத்தை வழங்கும் வகையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விவசாயிகளின் விளைச்சலுக்கு நியாயமான விலையை பெற்றுக் கொடுப்பதுடன், நுகர்வோருக்கும் குறைந்த விலையில் மரக்கறிகளைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஆலோசனைக்கு அமைய இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் அடிப்படையில், கரட், கிழங்கு, பீட், தக்காளி, லீக்ஸ் மற்றும் நூக்கல் ஆகிய 6 மரக்கறிகள் அடங்கிய 700 ரூபா சந்தைப் பெறுமதி கொண்ட பொதியை, இடைத்தரகர்கள் இன்றி 350 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, இடைத்தரகர்கள் இன்றி கொள்வனவு செய்யப்படும் குறித்த மரக்கறிகளை, கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு கோட்டை ரயில் நிலையம், மருதானை ரயில் நிலையம், இசுருபாய, சுஹுருபாய, செத்சிறிபாய மற்றும் நுகோகொடை ஆகிய இடங்களில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த திட்டத்தை கண்டி மாவட்டத்தின் 3 இடங்களிலும் செயற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz