ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கட்டியேழுப்ப, அதன்தலைமைத்துவம் சஜித்பிரேமதாஸவிடம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் மீண்டும் ஐக்கியதேசியக்கட்சி தலைவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம். அதாவது நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் கொடுத்துள்ள முடிவுகளை மீள பலதடவைகள் ஆராய்ந்து பாருங்கள். வரலாற்றி முதல்தடவையாக நாடாளுமன்றத்திற்கு ஒரு ஆசனத்தை கூட பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஐக்கிய தேசியக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. ஆகவே மீண்டும் கட்சியை வலுப்படுத்த சில நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும். அதில் முதலாவதான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதோடு, கட்சி தலைமையை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்படவேண்டும். அவ்வாறு இல்லை என்றால், ஐக்கிய தேசியக்கட்சிக்காக வாக்களித்த 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அநாதரவாக விடப்படுவார்கள். அவர்கள் தற்போது உள்ள நிலைமை மிகவும் மோசமானது. அரசாங்கத்திற்கு எதிராக உள்ள அனைத்து தரபபினரும் ஒன்றினைந்து மக்களை திரட்டவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது.
இதேவேளை, 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக் போவதாக கூறும் பலர் அன்று 19 ஆவது திருத்தத்திற்கு வாக்களித்தவர்களே என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ண தெரிவித்தார்.
ஜேஆர் ஜயவர்தன பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இருந்து 78 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பானது ஏகாதிபத்திய அரசியலமைப்பு என தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அதனை எதிர்க்கட்சியினரே பெரிதாக பேசிவந்தனர். நாட்டை வீணடிக்க போவதாகவும், எதிர்க்கட்சிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என குறிப்பிட்டனர். பிரஜைகளுக்கு சந்தர்ப்பம் இல்லை என விமர்சித்தனர். ஆனால் அவர்கள் தற்போது அதே 78 அரசியலமைப்புக்கே செல்வோம் என கூறுகின்றனர். அது மட்டுமல்லாது அரசாங்கத்தில் உள்ள பலர் அன்று 19 ஆவது திருத்ததிற்கு ஆதரவாக பேசியர் பலர் வாக்களித்தனர். ஆனால் தற்போது ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்க்டவேண்டும் 20 க்கு ஆதரவளிக் போவதாக கூறுகின்றனர். ஆகவே இந்த நடவடிக்கை நாட்டுக்காகவா அல்லது தனிப்பட்ட நபர்களுக்காகவா முன்னெடுக்கப்படுகின்றது என்பது தொடர்பில் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.