மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் எந்தவித சிக்கலும் ஏற்படமாட்டாது: கல்வி அமைச்சர்!

- Advertisement -

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் எந்தவித சிக்கலும் ஏற்படமாட்டாதென கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

20 ஆவது திருத்தத்தில் எந்தவித சிக்கல் நிலையும் இல்லை என சட்ட மாஅதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலே போதுமானதாகும் என அறிவிக்க்டப்டுள்ளது. அது கண்டிப்பாக கிடைக்கும் என்பது றெிந்ததே. எனவே அதனை நிறைவேற்றுவதற்கு சட்டரீதியான சிக்கல்கள் எதுவும் இல்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனைத்து பிரஜைகளுக்கும் உரிமை உண்டு. அரசியலமைப்பு பாதகத்தை ஏற்படுத்தும் காரணிக் இதில் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் எங்களால் முடியும். எந்தவொரு நபரையும் காரணமாக கொண்டு இந்த மாற்றம் கொண்டுவரப்படவில்லை. ஆனால் கடந்த அரசாங்கமே அதனை முன்னெடுத்திருந்தது. ராஜபக்ஸ குடும்பத்தை இலக்குவைத்தே 19 ஆவது சரத்து கொண்டுவரப்பட்டது. நாமல் ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாது இருக்க வயதெல்லையை மாற்றினார்கள், பெசில் மற்றும் கொட்டாபய ராஜபக்ஸவிற்கு நாடாளுமன்றத்திற்கு தெரிவாக முடியாதவாறு சரத்துகள் உருவாக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஜனாதிபதியாக முடியாதவாறு சரத்து உருவாக்கபடப்டது. எனவே இந்த திருத்ததை விமர்சிக்க அவர்களால் முடியாது.  

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இம்முறை நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளமையானது 19 திருத்தம் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள ஆதரவை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

2015 ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க சில தரப்புகள் ஒன்றிநந்து செயற்ப்பட்டவனர். அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து அரசாங்கம் ஒன்றை உருவாக்க ஒன்றாக செற்ப்பட்டனர். அரசாங்கத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர்களுக்கு நாட்டுமக்கள் மத்தியில் பிளவுப்பட்டு இருப்பதை போல காட்டிக்கொள்ளவேண்டிய தேவைக் காணப்பட்டது. அதற்காக அரசாங்கத்தின் எதிர்தரப்பு ஒன்றை உருவாக்கினர். எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனையும், எதிர்க்கட்சி பிரதான அமைப்பாளராக அநுரகுமார திஸாநாயக்கவையும் நியமித்துக்கொண்டனர். இந்த நாடகத்திலேயே மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக இருந்த வைராக்கியத்தை வெளிக்காட்டும் வகையிலேயே 19 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது. 40 வருடங்களாக நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமராகவும், கட்சித்தலைவராகவும் இருந்த ரணிலவிக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளார் என்றால், 19 ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள விருப்பு வெறுப்பை அறிந்துக்கொள்ள கூடியதாக இருக்கும். 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

போதைப் பொருள் பாவனைக்கு வறுமையே காரணம் – துரித நடவடிக்கை என்கிறார் அங்கஜன்!

நல்லூர் பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் அவசியமான ரயில் கடவைகளை அடையாளப்படுத்தி அதனை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான பொறிமுறைகளை உருவாக்கி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச செயலகருக்கும், ரயில்வே திணைக்கள...

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 748 தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 379 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 748 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டம் - பண்டாரகமை பிரதேச செயலாளர் பிரிவுக்கு...

சாய் பல்லவியுடன் இணையப்போகும் அந்த நகைச்சுவை நடிகர் யார்? விபரம் உள்ளே…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, அடுத்ததாக காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் வெளியான "பிரேமம்" என்ற படம்...

ஓஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ள சூரரைப் போற்று…?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இதன்படி, சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஏர் டெக்கான்...

Developed by: SEOGlitz