மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஷானி அபேசேகர விளக்கமறியலில்

- Advertisement -

கைது செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகர் ஷானி அபேசேகர எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகர் ஷானி அபேசேகரகம்பஹா நீதவான் நீதிமன்றில்  நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில்  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சிரேஷ் பொலிஸ்  அத்தியட்சகர் ஷானி அபேசேகர கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நரஹேன்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து  நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெலிவேரிய பகுதி ஆயுத கிடங்கு விவகார விசாரணைகளில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு உண்மைக்கு புறம்பான  சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...

3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை

3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு  நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...