மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய அரசாங்கத்தின் மூலம் 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படும்- அலி ஷப்ரி

- Advertisement -

புதிய அரசாங்கத்தின் மூலம் 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

- Advertisement -

புதிய அரசாங்கம் 19ஆவது திருத்தத்தை நீக்கி, 20ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இதன் அடுத்த கட்டமாக புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் எனவும், அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 19ஆவது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட சில விடயங்களை தொடர்ந்தும் பேண உத்தேசித்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டமை மற்றும் ஜனாதிபதி பதவிக்கு இரண்டு தடவைக்கு மேல் போட்டியிட முடியாது ஆகிய விடயங்கள் தொடர்ந்து பேணப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமது அரசாங்கம் தொடர்ந்தும் பொறுப்புடன் செயற்பட்டுவருவதாகவும், ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்!

குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...

பாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்!

புகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...

எஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல்  அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம்  தாமரைப்பாக்கத்தில் உள்ள  அவரது பண்ணை இல்லம் பகுதியில்   ராணுவ  மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன்  72  குண்டுகள்...

எஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

இளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கு எச்சரிக்கை!

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட ஆயிரத்து 200 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பஸ் முன்னுரிமை...

Developed by: SEOGlitz