மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 349 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

- Advertisement -

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 349 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

டுபாயில் இருந்து  கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த E K  648 எனும் விமானமூடாக 335  இலங்கையர்கள்  நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

அத்துடன் கட்டார் தோஹா நகரில் இருந்து பயணித்த  க்யு ஆர்  668 எனும் விமானமூடாக 14 , இலங்கையர்கள் இன்று அதிகாலை  1.30 அனவில்  நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு  நாடுகளுக்கு சென்றிருந்தவர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த அனைவரும் விமான நிலையத்தில் பி.சி ஆர் பிரசோதனைகளுக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...