மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

- Advertisement -

2020 பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கான  கால அவகாசம் இன்றுடம் நிறைவடைவதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர்  தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள நிலையில் இதுவரை தங்களது விபரங்களை   பதிவு செய்யாதவர்கள் இன்றைய தினத்திற்குள் அதனை பூர்த்தி செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சநிலைமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையத்தளமூடாக தங்களின் விபரங்களை பதிவு செய்வதற்கு அண்மையில் தீர்மானம் எட்டப்பட்டது.

இதன்பிரகாரம் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கடந்த 9  ம்  திகதி தொடக்கம் இணையத்தளமூடாக  தங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர்  தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்..

இந்த நிலையில்  கடந்த 9 ஆம்  திகதி தொடக்கம் நேற்றுவரையிலான காலப்பகுதியில் 190 உறுப்பினர்கள் மாத்திரமே தங்களின் விபரங்களை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி 9 ஆவது நாடாளுமன்றத்தின்  முதலாவது அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய தினம்  நாடாளுமன்ற  உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில்   நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்கள்  இன்றைய தினத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர்  தம்மிக்க தசநாயக்க  அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz