மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 174 பேர் வீடு திரும்பினர்!

- Advertisement -

இலங்கை இராணுவத்தினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 174 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவற்றுல் நுரைச்சோலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 105 பேர் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.

- Advertisement -

மேலும் பாசறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 29 பேரும், கன்னொருவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 14 பேரும் மற்றும், வாய்க்கால் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 11 பேரும், இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 9 பேரும் மற்றும் கல்பிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 6 பேரும் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 28 ஆயிரத்து 323 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 317 ஆக பதிவாகியுள்ளது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 21 பேர் நேற்றைய தினம் முழுமையாக குணமடைந்துள்ள நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 810 ஆக காணப்படுகின்றது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற அடிப்படையில் 80 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்ற்னர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 482 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக 1 இலசத்து 56 ஆயிரத்து 943 பி.சி.ஆர். பரிசோதனைகள் நாடளாவிய ரீதியில் இதுவரை மேற்கொள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் அம்பாந்தோட்டை...

இரத்தினபுரி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை மும்முரம்

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்படடுள்ள நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் மக்கள்  வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் இரத்தினபுரி...

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பம்

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 7 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் 12...

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...