மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுத்தேர்தலை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து

- Advertisement -

பொதுத்தேர்தல் நடவடிக்கைகளுக்காக விசேட போக்குவரத்துத் திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் தற்காலிகமாக தங்கியுள்ள வெளிமாவட்ட பிரஜைகள் தமது சொந்த  ஊர்களுக்கு செல்வதற்காகவும் மற்றும் கொழும்பு நகருக்கு வருகைதரவுள்ள  பொதுமக்களின் நன்மை கருதியும் இந்த விசேட போக்குவரத்து திட்டம்  நடைமுறைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த திட்டம்  நாளை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரை   அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த   விசேட ரயில்சேவை  நாளை  முதல்  ஓகஸ்ட் மாதம்  3 ஆம் திகதி வரை  முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொழும்பு கோட்டையில் இருந்து  நானு ஓயா வரையும் கொழும்பு கோட்டையில் இருந்து   மஹவ மற்றும் அநுராதபுரம் வரையும் அத்துடன்  கொழும்பு கோட்டையில் இருந்து பெலியத்த வரையிலும் விசேட ரயில்கள் சேவையில்  ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...

3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை

3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு  நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...

வாக்களிப்பு நிலையங்களில் 100% சுகாதாரப் பாதுகாப்பு உறுதி – மஹிந்த தேஷபிரிய

வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும்  சகல வாக்காளர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார். எனவே எந்தவித அச்சமும் சந்தேகமும் இன்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று...