பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியாக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அனுமதியுடன், பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர உள்ளிட்ட 6 பேருக்கு, உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டன.
இதன் பிரகாரம் மேல் மாகாண வடக்கு பிரிவுக்கு பொறுப்பான , பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.