மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கும் இறுதிக்கட்ட கூட்டம் இன்று

- Advertisement -

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கும் இறுதிக்கட்ட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன

இதன் போது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க,ரவி கருணாநாயக்க,அகிலவிராஜ் காரியவசம் மற்றும் பாலித ரங்க பண்டார உள்ளிட்டோர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது,

- Advertisement -

முதலில் தேசிய அளவில் கூட்டங்களை நடத்தி பின்னர் தொகுதி ரீதியாக பிரசார கூட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இம்முறை பொதுத் தேர்தலில் தமது பிரசார முறைமை குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வதமாக அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz