மினுவாங்கொடை பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை சுவரொன்றில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த பழைய மாணவர்கள் மூவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிலொன்றில் வருகை தந்த நபர்களினாலேயே, இந்தத் தாக்குதல் மேற்கெள்ளப்பட்டுள்ளது.
வேகத்தை குறைத்து செல்லுமாறு, ஓவியம் வரைந்து கொண்டிருந்த நபர்களினால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களுக்கு கூறப்பட்டதையடுத்தே, இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதன்படி, காயமடைந்தோர் கம்பஹா மற்றும் திவுலப்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்