திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் பச்சை மரங்களை வெட்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா – குரங்குபாஞ்சான் காட்டுப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பச்சை மரங்களை வெட்டிய நிலையில் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வான்எல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் கந்தளாய் மற்றும் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரனைகளின் போது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் கந்தளாய் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது