மெய்ப்பொருள் காண்பது அறிவு

உரப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு ஜனாதிபதி பணிப்பு

- Advertisement -

உரம் வழங்கல் மற்றும் விநியோகம் ஆகிய விடயங்கள் தொடர்பில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலான தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் நோக்கில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நீண்டகாலமாக காணப்படும் குறித்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதன்போது வலியுறுத்தினார்.

அதிக விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் ரசாயன உரங்களைப் பயன்படுத்தப் பழகியுள்ளதாகவும், இது மண்ணின் தன்மையை பாரிய அளவில் மாற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, இந்த நிலைமையை படிப்படியாக மாற்றி, இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், விவசாய இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, மரக்கறி செய்கை மற்றும் விவசாய நடவடிக்கைகள் அதிக அளவில் இடம்பெறுவதால், தற்போது உரப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, வட மாகாண விவசாயிகள் தற்போது இயற்கை உரத்தை பயன்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் சிறந்த தரம் கொண்ட விளைச்சல் கிடைக்கப் பெறுவதாகவும், வட மாகாண ஆளுநர் பி.எஸ்எம். சார்ள்ஸ், ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – நீதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடி பணிப்புரை..!

தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு நீதி  அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்..!

நான்கு நாடுகளுக்கான புதிய தூதுவர்கள்  இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கொரியக்...

புதிய வரவுசெலவு திட்டம் – அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது..!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் நவம்பர்...

கல்விசார் சமூகத்திற்கு அங்கஜன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!

நாட்டில் எதிர்காலத்தில் கல்விசார் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று...

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராஜியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில்...

Developed by: SEOGlitz