மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1858 ஆக உயர்வு

- Advertisement -

பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் 16 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நேற்றைய தினம்  09 பேரும், இன்றைய தினம் 07 பேரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்தமைக்கான சான்றிதல்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இதுவரை 280 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன், 56 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 67 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு குணமடைந்தவர்களில்  563 பேர் கடற்படை வீரர்கள் உள்ளடங்குவதாக கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 41 கடற்படையினர் நேற்று குணமடைந்ததை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 790 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், 41 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன்,  நாடுமுழுவதும்  கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 78 ஆயிரத்து 723 PCR பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் ஆயிரத்து 550 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1858 ஆக உயர்வு 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz