மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1635 ஆக அதிகரிப்பு

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்றைய தினம் அடையாளம் காணப்ப நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 811 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில்  இதுவரையான காலப்பகுதியில் 11 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 65  பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 813  பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 145 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 91 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 42 பேரும், இரணவில வைத்தியசாலையில் 50 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 92 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 110 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில்100 பேரும், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும், ஹம்பந்தோட்டை வைத்தியசாலையில் 107 பேரும் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில்28 பேரும்   கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  நாடுமுழுவதும்  கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 65 ஆயிரத்து 355  பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 58 பேர் இன்றைய தினம்  வீடுகளுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துகொண்டவர்களே இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 11 ஆயிரத்து 488 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துகொண்டு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 44 தனிமைப்படுத்தல் நிலையங்களில்  5 ஆயிரத்து 108 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டில்  754  கடற்படை அதிகாரிகள் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

இதன்படி, 403 கடற்படை அதிகாரிகள் குணமடைந்துள்ள நிலையில் 348 கடற்படை வீரர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz