மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

- Advertisement -

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கடிதமொன்றினை அனுப்பியுள்ளது.

12 வருடங்களாக தொடர்ந்தும் சிறையில் உள்ள 91 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியே இந்த கடிதம் அனுப்பட்டுள்ளது.

- Advertisement -

கருணா அம்மான், பின்ளையான், பத்மநாதன் போன்றோர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களை போலவே தாமும் விடுவிக்கப்படுவோம் என்ற நிலைப்பாட்டில் குறித்த அரசியல் கைதிகள் இருப்பதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பலவருடங்களாக சிறையில் இருப்பதன் காரணமாக, கருணை அப்படையில் அவர்களை விடுதலை செய்யுமாறு  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஜனாதிபதியிடம் இந்த கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஜனாதிபதியின் தற்போதைய ஆட்சிக்காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையானது தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும் எனவும் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தக் கடிதத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்ணேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஶ்ரீகாந்தா மற்றும் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

மின்சாரத் துறையின் மாற்றங்கள் தொடர்பில் டலஸ் அழகப்பெரும கருத்து!

மின்சாரத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் அழைப்பு விடுப்பதாக, மின்சக்தித் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையில் மாத்திரம் 65 லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர். அத்துடன் Leco நிறுவனத்தில் மாத்திரம்...

Developed by: SEOGlitz