மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி செயலகத்தின் குறைகேள் அதிகாரியாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் விக்ரமசிங்க நியமனம்

- Advertisement -

ஜனாதிபதி செயலகத்தில் பொது மக்கள் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கும் தீர்வினை முன்வைப்பதற்கும்  குறைகேள் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்   விக்ரமசிங்க, குறைகேள் அதிகாரியாக     நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அரச நிர்வாகக் கடமைகளில் இழைக்கப்படுகின்ற தவறுகளை விசாரணை செய்வதற்கும்  தீர்வு காண்பதற்கும் ஒம்புட்ஸ்மன்  என அழைக்கப்படும் குறைகேள்   அதிகாரி நியமிக்கப்படுகின்றார்.

இதனூடாக பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை  தனிப்பட்ட முறையில் பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி  அலுவலகத்தின்  குறைகேள்  அதிகாரி ,  ஜனாதிபதி அலுவலகம் கொழும்பு 1 எனும் முகவரிக்கு தபால்  மூலம் பொது மக்கள்    தங்களது முறைப்பாடுகளை  அனுப்பிவைப்பதற்கு சந்தர்ப்பம்  வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 0112 338 073 எனும் தொலை நகல் இலக்கத்தின் ஊடாகவோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல்  முகவரி ஊடாகவோ பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz