மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதாரப் பணியாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வாய்ப்பு

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும்  ஐந்து நட்சத்திர விடுதிகளில் விடுமுறையைக் கழிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி  தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், இது பற்றி ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,   கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு நாட்டிலுள்ள பத்து வைத்தியசாலைகளில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, இவ்வாறு தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு  சரியான முறையில் உணவை வழங்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை,  வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது, பேரணிகளை நடத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு  இடமளிக்க முடியாதென  அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து  தினசரி நிலைமைகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

தம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...

Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை!

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tigray பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன், Tigray...

Developed by: SEOGlitz