மெய்ப்பொருள் காண்பது அறிவு

தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

- Advertisement -

நாடளாவிய ரீதியில் கடந்த இரண்டு நாட்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமானது இன்று அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

பொசன் போயா விடுமுறைதினங்களை அடிப்படையாக கொண்டு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த நிலையிலேயே நாடயாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த  ஊரடங்கு சட்டமானது தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று முதல் நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று இரவு வெளியிட்டுள்ள  ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு, தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் அதிகளவில் நகரங்களுக்குள் பிரவேசிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.,

இன்னும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்காத நிலையில்  அத்தியவசியமற்ற தேவைக்காக ஒன்று கூடும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

அத்தியவசிய தேவைகளுக்கு நகரங்களுக்குள் பிரவேசிக்கும் மக்கள் முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, அரசாங்க மற்றும் தனியார் துறைசார்ந்த நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பொது மக்கள் பாதுகாப்பிற்கு முப்படையினர் கடமையில்…!

பொது மக்கள் பாதுகாப்பிற்கு முப்படையினரை கடமையில் ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார், இதற்கான அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ளது, இதற்கமைய இன்று முதல் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவுள்ளதாக...

நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி – சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளுக்கு தராதரமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாமல் ராஜபக்ஸ உறுதி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் தற்போது உள்ள சட்டங்களுக்கு அமைவாக...

ஆண்டுகள் இரண்டு கடந்தும் நீதிக்காய் இரந்து நிற்கும் மக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

Developed by: SEOGlitz