மெய்ப்பொருள் காண்பது அறிவு

விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரோஹித போகொல்லாகமவுக்கு அறிவித்தல்

- Advertisement -

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளர்.

- Advertisement -

தமக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக ரோஹித போகொல்லாகம பதிவு செய்துள்ள முறைப்பாட்டிற்கமைய குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி எதிர்வரும் 15 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதியிடம் பல்வேறு தடவைகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz