மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாத்திரைகள் முன்னெடுக்க தடை

- Advertisement -

பாரம்பரிய மற்றும் மத கோட்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த வருடம் பெரஹராவை  வணக்கஸ்தலங்கள் மற்றும் விகாரைகளில் ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன்,  கண்டி தலதா மாளிகை,  கதிர்காமம் மற்றும் சப்பிரகமுவ தேவாலயம் ஆகியவற்றின் ஊரவலங்கள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின்  நடவடிக்கைகளுக்கு அமைய நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கதிர்காமம், நல்லூர், திருகோணமலை உள்ளிட்ட மதஸ்தலங்களில் இடம்பெறும்  ஊர்வலங்களின் போது பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டது என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரஹராவில் பங்கேற்கும் கலைஞர்கள் அந்தப் பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தலாதா பெரஹரயின் கும்புல் மற்றும் ரந்தோலி பெரஹர ஆகியற்றை 10 நாட்களுக்கு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

LPL கிரிக்கெட் திருவிழா – Jaffna Stallions அணி அபார வெற்றி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டியில் Jaffna Stallions அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

கொரோனா உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதை மை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மேலும் 221 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனாவுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்...

நோர்வூட் பிரதேசத்தில் தீப்பரவல் : 12 குடியிருப்புகள் பாதிப்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிவ்வெளி தொழிற்சாலைப் பிரிவில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீப்பரவலினால் 12 குடியிருப்புகள் எரிந்து போயுள்ளன. இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 இற்கு  இடம்பெற்றதாக எமது பிராந்திய...

Developed by: SEOGlitz