அளுத்கம அம்பகஹ சந்தி பகுதியில் மனநலம் குன்றிய சிறுவன் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பணிப்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன,
களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸார் மா அதிபர் மற்றும் களுத்துறை பொலிஸ்பிரிவின் பொலிஸ் அத்தியகட்சகர் தலைமையில் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன்..
அத்துடன் இதன் போது கடமையில் இருந்த பொலிஸாரினால் அவர்களது கடமைகளுக்கு குந்தகம் விளைவித்துள்ளார்களா என்பது தொடர்பிலும் இந்த விசாரணைகளில் கவனம் செலுத்தப்படவு்ளளது,
இந்த சம்பவம் தொடர்பில் மனநலம் குன்றிய சிறுவனின் தந்தையிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,
மேலும் சிறுவன் நாகொடை நீதிமன்ற வைத்திய அதிகாரி மற்றும் மனநல வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.,
எனினும் சிறுவன் தொடர்பான மருததுவ அறிக்கை இதுவரை வழங்கப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்
அத்துடன் பொலிஸ் அதிபரின் பணிப்படையின் ஊடாக கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினாலும் வுிசாரணையொன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.